நாமக்கல் மாவட்டத்தில் முட்டை வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலிருந்தும் நிர்வாகிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, சங்கத் தலைவர் ஆனந்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில்,
- முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், முட்டை பதுக்கல் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டிலும் எந்த ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
- மேலும், நவம்பர்–டிசம்பர் மாதங்கள் மழைக்காலம் என்பதால் முட்டை உற்பத்தி சுமார் 15% குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை தள்ளிய நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை
வேலூரில், ஓடும் ரயிலில் செல்போனை பறித்து ஒரு பெண்ணை கீழே தள்ளிய குற்றத்தில் ஹேமராஜ் என்ற நபருக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி:
2022 ஆம் ஆண்டு, சென்னை–வேலூர் ரயிலில் பயணித்த இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, ஹேமராஜ் செல்போனை பறித்துள்ளார். அதன் பின்னர், அவர் அந்த பெண்ணை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டார்.
வேலூர் மகிளா நீதிமன்றம் விசாரணை முடிவில் ஹேமராஜுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இதற்கு முன்,
கோவை–திருப்பதி ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, பின்னர் ரயிலில் இருந்து தள்ளிய வழக்கில் இவருக்கு ஏற்கனவே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.