மனநல பராமரிப்பு மையத்தில் தாயின் மரணம் குறித்து சந்தேகம் – மகன் போலீசில் புகார்

Date:

சென்னை ஆவடி அருகே உள்ள ஒரு மனநல மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தனது தாயின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.

சேக்காடு அன்னை சத்தியா நகர் பகுதியில் RK மனிதநேய காப்பகம் என்ற பெயரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 56 பேர் சிகிச்சை மற்றும் பராமரிப்பில் உள்ளனர்.

இந்த மையத்தில், வேளச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர் தனது தாய் மேரியை சுமார் 20 நாட்களுக்கு முன் அனுமதி செய்திருந்தார்.

இந்நிலையில் மேரி உடல்நிலை திடீரென மோசமடைந்து உயிரிழந்துவிட்டதாக மைய நிர்வாகம் பாஸ்கருக்கு தகவல் அளித்தது.

இதையடுத்து பாஸ்கர் காப்பகத்துக்கு சென்று மரணம் குறித்து விளக்கம் கேட்டு விசாரித்தபோது, நிர்வாகம் தெளிவான பதில் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த பாஸ்கர், தாயின் மரணம் முறைகேடு அல்லது கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கலாம் என கூறி போலீசில் முறையான புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அயோத்தி ராமர் கோவில் கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர முதற்கோபுரத்தின் மேல் அமைந்துள்ள...

புதிய ‘About This Account’ அப்டேட் கலக்கம் — காங்கிரஸ் கணக்குகள் குறித்து சர்ச்சை வெடித்து எழுந்தது!

எக்ஸ் சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி, இந்திய அரசியலில் பெரும்...

1.000 ஏக்கர் வாழைத் தோட்டங்களில் மழைநீர் சேமித்து நின்றது

1.000 ஏக்கர் வாழைத் தோட்டங்களில் மழைநீர் சேமித்து நின்றது தூத்துக்குடி மாவட்டத்தின் காலங்கரை...

லுக் அவுட் நோட்டீஸ் விவகாரம் – 3 வாரங்களில் பதிலளிக்க ED-க்கு உயர்நீதிமன்றம் ஆணை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த...