• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு – நடப்பாண்டில் ஏழாவது முறையாக நிரம்ப வாய்ப்பு

athibantv by athibantv
அக்டோபர் 21, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 860 📋

மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு – நடப்பாண்டில் ஏழாவது முறையாக நிரம்ப வாய்ப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து பெரிதும் அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 119 அடி அளவை எட்டியுள்ளது. இதனால், நடப்பாண்டில் ஏழாவது முறையாக மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை அடைய வாய்ப்பு இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் ஆகியவற்றின் காரணமாக, மேட்டூர் அணை இதற்கு முன் ஆறு முறை 120 அடி முழு கொள்ளளவை எட்டியிருந்தது.

Related posts

“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

ஏப்ரல் 25, 2026
ராமேஸ்வரத்தில் பரபரப்பு: ஏஜெண்டுகள் இல்லாதபோது EVM பேட்டரி அகற்றம்? – தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட கட்சியினர்!

ராமேஸ்வரத்தில் பரபரப்பு: ஏஜெண்டுகள் இல்லாதபோது EVM பேட்டரி அகற்றம்? – தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட கட்சியினர்!

ஏப்ரல் 25, 2026

சில வாரங்களுக்கு முன் காவிரி நீர்வரத்து குறைந்ததுடன், டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பும் அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்திருந்தது. ஆனால், தற்போது மழை மீண்டும் பலமாக பெய்ததால், அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் விநாடிக்கு 9,026 கனஅடி அளவில் இருந்த நீர்வரத்து, நேற்று காலை 10,374 கனஅடியாக உயர்ந்தது.

அதேநேரம், டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாசனத்துக்கான தேவையும் குறைந்துள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து தற்போது டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, மேலும் கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது.

இதனால், திறப்பைவிட வரத்து அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நீர்மட்டம் 118.55 அடியில் இருந்து 119 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 91.17 டிஎம்சியில் இருந்து 91.88 டிஎம்சியாக உயர்ந்துள்ளது.

நீர்மட்டம் மேலும் அதிகரித்து முழுக் கொள்ளளவை எட்டும் சாத்தியம் உள்ளதால், நீர்வளத் துறை அதிகாரிகள் அணையின் 16 கண் மதகு பகுதியில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

2027 உலகக் கோப்பையில் ரோஹித்தும் கோலியும் விளையாடுவார்கள்” – ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் எதிர்பார்ப்பு

Next Post

தீபாவளி பண்டிகை: அரசியல் தலைவர்கள் சார்பில் நல்வாழ்த்துகள்!

Next Post

தீபாவளி பண்டிகை: அரசியல் தலைவர்கள் சார்பில் நல்வாழ்த்துகள்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

ஏப்ரல் 25, 2026
பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

ஏப்ரல் 25, 2026
சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

ஏப்ரல் 25, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!
  • பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!
  • சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

ஏப்ரல் 25, 2026
பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

ஏப்ரல் 25, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN