தருமபுரி மாவட்டத்தின் அரூர் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், மக்கள் கயிறை கட்டிக் கொண்டு ஆற்றைக் கடந்தே போக்குவரத்தை மேற்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
வாச்சாத்தி – கலசப்பாடி சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ச்சியான கன மழை பெய்ததால் மலைப்பகுதியில் இருக்கும் காட்டாறு வெள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பாலம் இல்லாத சூழலில், பெருக்கெடுத்த நீரைத் தாண்ட கயிறை பற்றிக் கொண்டு ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.