கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் ஓவியப் போட்டியில் பலர் கலந்து கொண்டனர்.
டிசம்பர் 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இப்போட்டியை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார்.
போட்டியில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு, வித்தியாசமான ஓவியங்களை உருவாக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர். வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும், பண பரிசுகளும் வழங்கப்பட்டன.