தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிராக வருவாய்த் துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தத் திமுக அரசு திட்டமிட்டு தூண்டிவருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரத்தின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“வ.உ.சி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் எப்போதும் பெருமை கொள்கிறோம். சுதந்திரப் போராட்ட வீரர்களை மதித்து கெளரவிப்பதில் முதன்மையானவர் பிரதமர் மோடி.
திருநெல்வேலி மக்களுக்கு நான் என்றுமே நன்றியுடன் இருப்பேன். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக வருவாய்த் துறை பணியாளர்கள் அறிவித்துள்ள போராட்டத்திற்கு திமுக அரசு நேரடியாக காரணம். வருவாய்துறையினர் அரசின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது திமுக அரசு அவர்களைப் பயமுறுத்தியது; ஆனால் தற்போது அவர்களுக்குப் போக சாப்பாடு கொடுக்கிறார்கள். சாப்பாடு கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடுமா?
பாஜக மற்றும் விஜய் இணைந்துவிட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பா கூறியிருப்பதாகவும், அவரது விருப்பம் நிச்சயமாக நிஜமாகும் எனவும் தெரிவித்தார்.
எங்கள் கூட்டணி குறித்து 2026 ஜனவரி 1க்கு பிறகு அறிவிப்போம். பீஹாரில் பிரசாந்த் கிஷோர் வெறும் 2% வாக்குகளை மட்டும் பெற்றார்; அதே நிலை தமிழகத்தில் வெற்றி கழகத்திற்கும் ஏற்படும்,” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.