• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஜூன் 4, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் பெரும் தீர்ப்பு

athibantv by athibantv
நவம்பர் 18, 2025
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.8K 🔥 📋

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முக்கிய தீர்ப்பை அறிவித்துள்ளது.

1971-ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் சுதந்திர நாடாக ஆனது. அந்த போர் காலத்தில் உயிரிழந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு அடுத்தபடியாக 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் 2024 ஜூன்–ஜூலையில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரமாக சிலந்த, அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, காவல்துறைக்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு ஆகியவற்றில் 1,400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர்; மேலும் 25,000 பேர் காயமடைந்தனர்.

2024 ஆகஸ்ட் மாதத்தில் மாணவர் போராட்டம் தலைநகர் டாக்காவில் உச்சத்தை எட்டியது. அவர்கள் நாடாளுமன்ற மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்ட முக்கிய இடங்களை முற்றுகையிட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பில், 2024 ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடத்துகிறது.

இந்த பின்னணியில், மாணவர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரணையைத் தொடங்கியது.


ஷேக் ஹசீனாவுக்கு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்

ஷேக் ஹசீனாவுக்கு 5 முக்கிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன:

  1. மாணவர்களை கொலை செய்ய நேரடி உத்தரவு
  2. வன்முறையைத் தூண்டும் பேச்சு
  3. ஆதாரங்களை அழித்தல்
  4. மாணவர் சங்க தலைவரை கொலை செய்ய உத்தரவு
  5. டாக்காவில் 6 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பு

ஒராண்டிற்கும் மேல் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பாயம் 453 பக்கங்களிலான தீர்ப்பை வழங்கியது.

இதன்படி —

  • குற்றச்சாட்டுகள் 1, 2, 3 நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது.
  • முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானுக்கும் அதே தண்டனை வழங்கப்பட்டது.
  • முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல் மமூனுக்கு, அரசு சார்பில் சாட்சி அளித்ததற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ஹசீனா மற்றும் அசாதுஸ்மான் கான் இருவரும் 30 நாட்களுக்குள் நேரடியாக தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


வங்கதேசத்தின் பதில்: இந்தியாவிடம் ஒப்படைப்பு கோரிக்கை

வங்கதேச அட்டர்னி ஜெனரல் தெரிவித்ததாவது:

இருவரும் தற்போது இந்தியாவில் தங்கியிருப்பதால், அவர்களை கைது செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. மேலும் அவர்களின் சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வங்கதேச வெளியுறவுத்துறை, இந்திய அரசு இந்த இருவரையும் நாடு கடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


இந்தியா ஒப்படைக்குமா? — நிபுணர்களின் கருத்து

சட்ட நிபுணர்கள் கூறுவதாவது:

  • ஷேக் ஹசீனா இந்தியாவின் நெருங்கிய கூட்டாளர்;
  • இந்தியா அவரை நாடு கடத்த ஒப்புக்கொள்ளுவது அரிது.
  • இந்தியா மறுக்கும்எனில், வங்கதேசம் இன்டர்போல் உதவி கோரும் வாய்ப்பு உள்ளது.
  • அது சாத்தியமாகாத நிலையில், ஐ.நா. முன் முறையிடும் வாய்ப்பு உள்ளது.

    ஆனால் சர்வதேச அரங்கில் இந்தியா வலுவான செல்வாக்கு பெற்றிருப்பதால், அந்த வழியும் வெற்றியடைவது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.


‘பாரபட்ச தீர்ப்பு’ — ஷேக் ஹசீனாவின் பதில்

தீர்ப்புக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையில் ஹசீனா கூறியதாவது:

Related posts

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

ஜூன் 3, 2026
குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மேற்காசியாவில் மீண்டும் கடும் பதற்றம்!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மேற்காசியாவில் மீண்டும் கடும் பதற்றம்!

ஜூன் 3, 2026
  • மனித உரிமை மீறல்களில் நான் ஈடுபடவில்லை, என் ஆட்சியில் உரிமைகள் காக்கப்பட்டன.
  • 10 லட்ச ரோஹிங்கியர்களுக்கு நான் மனிதாபிமான அடைக்கலம் கொடுத்தேன்.
  • தற்போதைய தீர்ப்பு அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.
  • முகமது யூனுஸ் அரசு சட்டபூர்வமான அரசு அல்ல; அதன் கீழ் இயங்கும் தீர்ப்பாயமும் செல்லாது.
  • என் கட்சியான அவாமி லீக்கை பலவீனப்படுத்த சதி நடைபெற்று வருகிறது.
  • தீர்ப்பாயத்தில் எனது சார்பில் வழக்கறிஞர் ஆஜராக அனுமதிக்கப்படவில்லை.
  • இந்த குற்றச்சாட்டை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்; வங்கதேச அரசு அதற்கு தயாரா?
  • மக்கள் ஆதரவுடன் நாடை மீட்போம்.
📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

கடுமையான பணி அழுத்தம்: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இன்று முதல் புறக்கணிக்கும் வருவாய்த் துறை சங்கங்கள்

Next Post

மதினா புனித யாத்திரை விபத்து: டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரையில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு

Next Post

மதினா புனித யாத்திரை விபத்து: டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரையில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மாணவர்கள் இடைநிற்பதை இந்த ஆண்டு உறுதி செய்வோம்; பள்ளிகளில் உணவின் தரம் மேம்படும்: வன்னி அரசு!

மாணவர்கள் இடைநிற்பதை இந்த ஆண்டு உறுதி செய்வோம்; பள்ளிகளில் உணவின் தரம் மேம்படும்: வன்னி அரசு!

ஜூன் 4, 2026
ஆந்திரா குரூப் 1 தேர்வு நியமனங்களில் முறைகேடு: ஒய்எஸ்ஆர்சிபிக்கு எதிராக டிடிபி தீவிர போராட்டம்!

ஆந்திரா குரூப் 1 தேர்வு நியமனங்களில் முறைகேடு: ஒய்எஸ்ஆர்சிபிக்கு எதிராக டிடிபி தீவிர போராட்டம்!

ஜூன் 4, 2026
தவெக காங்கிரஸ் கட்சியின் பினாமி போல செயல்படுகிறது: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடல்!

தவெக காங்கிரஸ் கட்சியின் பினாமி போல செயல்படுகிறது: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடல்!

ஜூன் 4, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மாணவர்கள் இடைநிற்பதை இந்த ஆண்டு உறுதி செய்வோம்; பள்ளிகளில் உணவின் தரம் மேம்படும்: வன்னி அரசு!
  • ஆந்திரா குரூப் 1 தேர்வு நியமனங்களில் முறைகேடு: ஒய்எஸ்ஆர்சிபிக்கு எதிராக டிடிபி தீவிர போராட்டம்!
  • தவெக காங்கிரஸ் கட்சியின் பினாமி போல செயல்படுகிறது: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடல்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மாணவர்கள் இடைநிற்பதை இந்த ஆண்டு உறுதி செய்வோம்; பள்ளிகளில் உணவின் தரம் மேம்படும்: வன்னி அரசு!

மாணவர்கள் இடைநிற்பதை இந்த ஆண்டு உறுதி செய்வோம்; பள்ளிகளில் உணவின் தரம் மேம்படும்: வன்னி அரசு!

ஜூன் 4, 2026
ஆந்திரா குரூப் 1 தேர்வு நியமனங்களில் முறைகேடு: ஒய்எஸ்ஆர்சிபிக்கு எதிராக டிடிபி தீவிர போராட்டம்!

ஆந்திரா குரூப் 1 தேர்வு நியமனங்களில் முறைகேடு: ஒய்எஸ்ஆர்சிபிக்கு எதிராக டிடிபி தீவிர போராட்டம்!

ஜூன் 4, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN