எஸ்ஐஆர் திருத்தம்: ஆன்லைனில் கணக்கீட்டு படிவம் நிரப்புவது எப்படி? – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

Date:

வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு (Enumeration) படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

2002 மற்றும் 2005 வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை

https://www.voters.eci.gov.in/

என்ற இணையதளத்தில் வாக்காளர்கள் பார்வையிடலாம்.

மேலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான

https://voters.eci.gov.in

மூலம் கணக்கீட்டு படிவத்தை ஆன்லைனில் நிரப்பும் வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் தங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் மூலம் இணையதளத்தில் உள்நுழையலாம். இதற்காக பதிவுசெய்யப்பட்ட கைபேசி எணுக்கு அனுப்பப்படும் OTP-ஐ (ஒருமுறை கடவுச்சொல்) உள்ளிட வேண்டும். பின்னர், “Fill Enumeration Form” என்ற இணைப்பைத் தேர்வு செய்து படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.

இந்த வசதியை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள பெயர் ஒன்றுபடும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

OTP மூலம் வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் அந்த பக்கத்தில் கேட்கப்படும் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் இணையப்பக்கம் e-sign நிலையில் சென்றடையும். அப்போது மீண்டும் OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்டவுடன் படிவம் வெற்றிகரமாக பதிவுபெறும்.

பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் உள்ளவர்களும், வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் விவரங்களில் பெயர் பொருந்துவோரும் இந்த ஆன்லைன் வசதியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் நாயகியாக ஸ்ரீலீலா

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். இருவரும் சமீபத்தில்...

ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.45,000 கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் மோடி, அமித் ஷா பாராட்டு

மத்திய அமைச்சரவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏற்றுமதியாளர்களின்...

‘மோடியை விமர்சிப்பது எளிது; ஆனால்…’ – ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் ராகுலை விமர்சித்து

பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வெற்றி பெறுவதை பாராட்டி,...

“போடி தொகுதியை திமுக கைப்பற்ற முடியாது” – ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் போடி சட்டமன்ற...