இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள், ரூ.50,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் “நான் முதல்வன்” (போட்டித் தேர்வுகள் பிரிவு) சிறப்பு திட்ட இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1000 மாணவர்களுக்கு, முதற்கட்ட (Preliminary) தேர்வுக்குத் தயாராக மாதந்தோறும் ரூ.7,500 வழங்கப்படுகிறது. மேலும், முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒருமுறை ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தற்போது, UPSC மெயின் தேர்வில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் பயனடைந்த 659 பேரில் 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 87 பேர் மாநில அரசு வழங்கிய பயிற்சியிலேயே பயின்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, UPSC முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான (Interview) தயாரிப்புக்காக ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இந்தத் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும், விண்ணப்பங்கள் இன்று (நவம்பர் 12) முதல் நவம்பர் 24 வரை
👉 https://naanmudhalvan.tn.gov.in/