ஆசியக் கோப்பை 2027 தகுதி சுற்றில் தோல்வி: சுனில் சேத்ரி மீண்டும் ஓய்வு அறிவிப்பு

Date:

ஆசியக் கோப்பை 2027 தகுதி சுற்றில் தோல்வி: சுனில் சேத்ரி மீண்டும் ஓய்வு அறிவிப்பு

இந்திய கால்பந்தின் முன்னணி வீரரும், கேப்டனுமான சுனில் சேத்ரி சர்வதேச அரங்கில் இருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற அவர், சில மாதங்களே கழித்து மீண்டும் பந்தாட்டத்திலிருந்து விலகியுள்ளார்.

ஆசியக் கோப்பை 2027 தகுதி சுற்றின் கடைசி கட்டத்தில் இந்திய அணி வெளியேறியது. இதையடுத்து தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையை முடிக்க இருப்பதாக சேத்ரி தெரிவித்தார். 2024-ல் ஓய்வு அறிவித்த பின்னர் மீண்டும் விளையாடிய அவர், 6 ஆட்டங்களில் வெறும் ஒரு கோல் மட்டுமே அடித்தார்.

அக்டோபர் 14 அன்று சிங்கப்பூருக்கு எதிராக நடைபெற்ற போட்டி, சுனில் சேத்ரியின் கடைசி சர்வதேச ஆட்டமாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் இந்தியா 2–1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

41 வயதான சேத்ரி, இந்திய அணிக்காக மொத்தம் 157 போட்டிகளில் 95 கோல்கள் அடித்துள்ளார். இதன்மூலம் இந்தியா சார்பில் அதிக கோல்கள் அடித்த வீரராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இனி சர்வதேச மட்டத்திலிருந்து ஓய்வு பெற்றாலும், கிளப் மட்டத்திலான போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார். சமீபத்தில் அவர் பெங்களூரு கால்பந்து கிளப்புடன் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆத்தூர் அருகே சோகம்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் பலி!

ஆத்தூர் அருகே சோகம்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி முதியவர்...

ஹார்முஸ் ஜலசந்தி போர் பதற்றம்: ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் பலி!

ஹார்முஸ் ஜலசந்தி போர் பதற்றம்: ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்திய...

“அரசு அலுவலகம் 4 நாள்… பள்ளிக்கு லீவு”: பாகிஸ்தானின் வினோதக் கட்டுப்பாடுகள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

"அரசு அலுவலகம் 4 நாள்... பள்ளிக்கு லீவு": பாகிஸ்தானின் வினோதக் கட்டுப்பாடுகள்...

திருப்பதியில் எல்.முருகன் – நயினார் நாகேந்திரன் தரிசனம்: சங்கராச்சார்யரை சந்தித்து ஆசி பெற்றனர்!

திருப்பதியில் எல்.முருகன் - நயினார் நாகேந்திரன் தரிசனம்: சங்கராச்சார்யரை சந்தித்து ஆசி...