தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், 1983-ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட போர் காரணமாக பல்வேறு காலங்களில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதியாக வந்தனர். உலகின் பல நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளதுடன், இந்தியாவில் அவர்கள் பெரும்பாலும் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
ராமதாஸ் தெரிவித்ததாவது, தற்போதைய தலைமுறை சுதந்திரமாக வாழ முதல்கட்டமாக தமிழகத்தில் நடைபெற உள்ள வாக்காளர் திருத்த பணியின் போது, ஈழத் தமிழர்களுக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும். இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வாக்காளர் திருத்த பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் வரும்போது, பாமக நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தல் அலுவலர்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்று தகவல்களை குறிப்பெடுத்து, சந்தேகங்களை தெளிவுபடுத்தி, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.