தமிழகத்தில் எஸ்ஐஆர் செயல்முறையை நிறுத்தாவிட்டால் உச்சநீதிமன்றம் செல்ல தீர்மானம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்; இல்லையெனில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பீஹாரில் ஏற்பட்ட தவறுகள் சரி செய்யப்படாமல், தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் நடைமுறையை தொடங்குவது வாக்குரிமையை பாதிக்கும் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, திராவிடர் கழகம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன. பாமக, நாதக, தவெக உள்ளிட்டவை கூட்டத்தை புறக்கணித்தன.
கூட்டத்தில் கூறப்பட்ட முக்கிய கருத்துகள்
திராவிடர் கழகம் தலைவர் வீரமணி
- எஸ்ஐஆருக்கு தேர்தல் ஆணையத்துக்கு அரசியலமைப்புச் சட்டப்படி அதிகாரமில்லை
- பூத் அலுவலர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் கிடையாது
- உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
- குடியுரிமை சான்று போன்ற ஆவணங்கள் கேட்டால் மக்கள் தர இயலாது
- பருவமழை காலத்தில் ஒரு மாதத்தில் பணி முடிக்கச் சொல்வது நியாயமில்லை
- தேர்தல் ஆணையம் மோசடி செய்கிறது; தமிழகத்தில் குறுக்கு வழி வெற்றி நோக்கம்
விசிக தலைவர் திருமாவளவன்
- இது வாக்குரிமை மீதான தாக்குதலல்ல; குடியுரிமை மீதான தாக்குதல்
- பழைய வாக்காளர் பட்டியல் பதிவை வைத்து குடியுரிமை சரிபார்ப்பு தேவையெனக் கூறுவது என்ஆர்சி நோக்கம்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
- சில கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தது வருத்தம்
- பீஹாரில் 6.5 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்; தமிழகத்தில் 75 லட்சம் வெளிமாநில வாக்காளர்கள் உருவாகும் அபாயம்
- பாஜக திட்டமிட்ட நடவடிக்கை, ஏற்றுக்கொள்ள முடியாது
சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம்
- எஸ்ஐஆர் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
மநீம தலைவர் கமல்ஹாசன்
- மக்களாட்சியின் அடிப்படை வாக்குரிமை
- 65 லட்சம் பேர் வாக்குரிமை இழந்துள்ளனர்
- ஏன் 12 மாநிலங்களில் மட்டும்?
- இந்த பணி 2026 தேர்தலுக்குப் பிறகு செய்ய வேண்டும்