கரூர் வேலுச்சாமிபுர வியாபாரிகளிடம் சிபிஐ விசாரணை
கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த வியாபாரிகளை, ஞாயிற்றுக்கிழமை காலை சிபிஐ அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினர்.
செப்டம்பர் 27 அன்று வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 110 பேர் காயமடைந்தும் நினைவிலிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார், மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இவ்வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு, குஜராத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான குழு கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.
அக்டோபர் 31 அன்று சிபிஐ குழு சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று அங்குள்ள கடை உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், 3டி லேசர் ஸ்கேனர் மூலம் இடத்தை ஆய்வு செய்தது.
அதன் தொடர்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை காலையிலும் வேலுச்சாமிபுரத்தில் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க் வைத்திருக்கும் சுமார் 10 வியாபாரிகளை பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகைக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன