இந்திய டென்னிஸ் நட்சத்திரம் ரோஹன் போபண்ணா ஓய்வு அறிவிப்பு
இந்திய டென்னிஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரோஹன் போபண்ணா, போட்டிநிலையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இரட்டையர் பிரிவில் சிறந்து விளங்கும் போபண்ணா, இந்தியாவின் அனுபவமிக்க டென்னிஸ் வீரராக கருதப்படுகிறார். இதுவரை இரட்டையர் போட்டிகளில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை பதிவு செய்துள்ளார்.
நேற்று, தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு முடிவுக் கட்டுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.