இந்திய மகளிர் அணிக்கு ஜி.கே. வாசன் வாழ்த்து
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி சாதனை வெற்றி பெற்றது பெருமைக்குரியது. அணி வீராங்கனைகளின் கடின முயற்சி, உழைப்பு மற்றும் ஒற்றுமை இந்த வெற்றிக்கு காரணம் என அவர் கூறினார். குறிப்பாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் எடுத்த சிறப்பான ஆட்டத்தையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் தலைமையையும் அவர் பாராட்டினார்.
இந்த வெற்றியால் இந்திய மகளிர் அணி பல சாதனைகளை முறியடித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. வரவிருக்கும் இறுதிப் போட்டியிலும் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.