உலக அமைதிக்குப் இந்தியா–ஜப்பான் உறவு முக்கியம்: மோடி
சமீபத்தில் ஜப்பான் பிரதமராக பதவியேற்ற சனே தகைச்சியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி வாழ்த்துத் தெரிவித்தார். உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக இந்தியா–ஜப்பான் உறவு வலுவாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி 21ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்றதையடுத்து, மோடி ஏற்கனவே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று தொலைபேசியில் நடந்த உரையாடலில், இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்களிலும் விரிவாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
உலகளாவிய அமைதி, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்காக இந்தியா–ஜப்பான் இடையேயான நெருக்கமான கூட்டாண்மை மிக அவசியம் என்பதில் இருநாடுகளும் ஒன்றுபட்ட கருத்தில் உள்ளன என்று மோடி தனது பதிவில் குறிப்பிட்டார்.