• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஜூன் 20, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

திமுக அரசின் தவறுகளைக் காரணம் காட்டி தவெக அரசு மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

athibantv by athibantv
ஜூன் 19, 2026
in Tamil-Nadu, Political
0
திமுக அரசின் தவறுகளைக் காரணம் காட்டி தவெக அரசு மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
📢 WhatsApp Channel Join
👁️ 2.9K 🔥 📋

திமுக அரசின் தவறுகளைக் காரணம் காட்டி தவெக அரசு மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

சென்னை:

கடந்த கால திமுக அரசின் நிதி நிர்வாகத் தவறுகளையும், மாநிலத்தின் கடன் சுமையையும் காரணம் காட்டி, தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு மக்கள் நலத் திட்டங்களிலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு “வெள்ளை அறிக்கை” என்ற பெயரில் தவெக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் வெறும் கடன் பத்திரத்தை மட்டுமே வாசித்துள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், தேர்தலின் போது தவெக அளித்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் குறித்து சட்டமன்ற உரையில் முதலமைச்சர் இதுவரை ஒரு வார்த்தைக் கூடப் பேசாதது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மேகதாது தனித்தீர்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கூட்டாக ஆதரவு!

மேகதாது தனித்தீர்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கூட்டாக ஆதரவு!

ஜூன் 19, 2026
யோகா செய்வதால் என்ன நன்மை? உடலளவிலும் மனதளவிலும் விழிப்புணர்வு தரும்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

யோகா செய்வதால் என்ன நன்மை? உடலளவிலும் மனதளவிலும் விழிப்புணர்வு தரும்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

ஜூன் 19, 2026

கடன் சுமை சிதம்பர ரகசியம் அல்ல:

தொடர்ந்து முதலமைச்சரை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், “மாநிலத்தின் கடனைக் காரணம் காட்டி, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை அப்படியே கிடப்பில் போடுவதற்கு நீங்கள் திட்டம் தீட்டுகிறீர்களோ எனத் தோன்றுகிறது. கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழகத்தின் பொருளாதாரத்தை திமுக எப்படியெல்லாம் சிதைத்து, மக்களின் தோள்களின் மீது கடன் சுமையைக் கூட்டி வைத்திருந்தது என்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல. நேற்றைக்கு வந்த தவெக புலனாய்வு செய்து இதைப் புதிதாகக் கண்டுபிடித்து விடவில்லை; பல அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்த வெட்ட வெளிச்சமான விஷயம். இவ்வளவு ஏன், தேர்தல் பிரச்சாரத்தின் போது இதே பொருளாதாரக் கடனைச் சுட்டிக்காட்டி திமுகவை விமர்சித்து வாக்குச் சேகரித்தவர் தானே நீங்கள்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

வாக்குறுதிகளில் சமரசம் செய்தால் பாஜக வேடிக்கை பார்க்காது:

தமிழகம் கடுமையான கடன் சுமையில் தவிக்கிறது என்று முன்பே தெரிந்திருந்தும், முழுக்க முழுக்க பணபலத்தை மட்டுமே மையமாகக் கொண்டு, திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், குழந்தைகளுக்குத் தங்க மோதிரம், மாதம் ரூ. 2,500 மகளிர் உதவித்தொகை, பட்டதாரிகளுக்கு ரூ. 4,000 நிதியுதவி மற்றும் பயிர்க்கடன் முழுமையான தள்ளுபடி என இத்தனை வாக்குறுதிகளைத் தேர்தலின் போது எதற்காக வாரி இறைத்தீர்கள் என்றும், மாற்றம் தருவோம் என மேடைக்கு மேடை எதற்கு முழங்கினீர்கள் என்றும் அவர் சாடியுள்ளார். “முதல்வரே, நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பித்தான் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எனவே, திமுக விட்டுச் சென்ற கடனைக் காரணம் காட்டி, கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் நீங்கள் ஏதேனும் சமரசம் செய்ய முயன்றால், அதனை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என்று நயினார் நாகேந்திரன் தனது பதிவின் வாயிலாகத் தவெக அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

யோகா செய்வதால் என்ன நன்மை? உடலளவிலும் மனதளவிலும் விழிப்புணர்வு தரும்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

Next Post

மேகதாது தனித்தீர்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கூட்டாக ஆதரவு!

Next Post
மேகதாது தனித்தீர்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கூட்டாக ஆதரவு!

மேகதாது தனித்தீர்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கூட்டாக ஆதரவு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? உலகப் பொருளாதாரத்தின் ‘ஷாக் அப்சார்பர்’ சீனா – சிறப்பு தொகுப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? உலகப் பொருளாதாரத்தின் ‘ஷாக் அப்சார்பர்’ சீனா – சிறப்பு தொகுப்பு!

ஜூன் 19, 2026
மேகதாது தனித்தீர்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கூட்டாக ஆதரவு!

மேகதாது தனித்தீர்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கூட்டாக ஆதரவு!

ஜூன் 19, 2026
திமுக அரசின் தவறுகளைக் காரணம் காட்டி தவெக அரசு மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

திமுக அரசின் தவறுகளைக் காரணம் காட்டி தவெக அரசு மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

ஜூன் 19, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? உலகப் பொருளாதாரத்தின் ‘ஷாக் அப்சார்பர்’ சீனா – சிறப்பு தொகுப்பு!
  • மேகதாது தனித்தீர்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கூட்டாக ஆதரவு!
  • திமுக அரசின் தவறுகளைக் காரணம் காட்டி தவெக அரசு மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Category

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? உலகப் பொருளாதாரத்தின் ‘ஷாக் அப்சார்பர்’ சீனா – சிறப்பு தொகுப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? உலகப் பொருளாதாரத்தின் ‘ஷாக் அப்சார்பர்’ சீனா – சிறப்பு தொகுப்பு!

ஜூன் 19, 2026
மேகதாது தனித்தீர்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கூட்டாக ஆதரவு!

மேகதாது தனித்தீர்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கூட்டாக ஆதரவு!

ஜூன் 19, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN