தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது: ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெய்சங்கர் பதிலடி!
பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை மாநாட்டில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை விமர்சிக்கும் சில ஐரோப்பிய நாடுகள், மறுபுறம் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பாகிஸ்தானுக்கு விற்பனை செய்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். ஐரோப்பாவுக்கு ஆபத்து ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் இந்தியர்கள் ஈடுபடுவதில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்கும் வகையில் ஐரோப்பிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது கவலைக்குரியது எனத் தெரிவித்தார். மேலும், உலகளவில் ஒவ்வொரு நாடும் தனது சொந்த தேசிய நலனின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கிறது என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவும் தனது எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே தன்னாட்சியோடு செயல்படுகிறது என்பதை மிக உறுதியாக வலியுறுத்தினார்.




