கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எழு புள்ளி ஏழு சதவீதமாக உயர்வு
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் இந்தியப் பொருளாதாரம் மிக வேகமான வளர்ச்சியை எட்டி வருகிறது. அந்த வகையில், கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.7 சதவீதமாக அபார அதிகரிப்பைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட புதிய ஜிடிபி வரிசையின்படி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் மட்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலகளாவிய புவிசார் அரசியல் சவால்கள், எரிசக்தி சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிலையற்ற உலகப் பொருளாதாரச் சூழல் போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சி வேகத்தைத் திறம்படத் தக்க வைத்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.





