சென்னையில் பாஜகவின் தென்னிந்திய மாநிலங்களுக்கான அவசரப் பயிற்சிப் பட்டறை: தேசிய மற்றும் மாநில முக்கியத் தலைவர்கள் திரளாகப் பங்கேற்பு!
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தென்னிந்திய மாநிலங்களுக்கான மிக முக்கிய உள்கட்சிப் பயிற்சிப் பட்டறை (Workshop) இன்று சென்னையில் மிக விமரிசையாக நடைபெற்றது. தென்னிந்திய மாநிலங்களில் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி, உள்கட்டமைப்பு பலப்படுத்துதல் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிப்பதற்காக இப்பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், பாஜாக தேசியப் பொதுச் செயலாளர் திரு. தருண் சுக் (Tarun Chugh), தேசிய அமைப்பு இணைப் பொதுச் செயலாளர் திரு. சிவப்பிரகாஷ் (Shivprakash), கட்சியின் மூத்த தலைவர் திரு. வி. சதீஷ் (V Satish) ஆகியோர் டெல்லியிலிருந்து வருகை தந்து கலந்துகொண்டனர். இவர்களுடன், தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) மற்றும் கட்சியின் முக்கிய மாநில, மாவட்ட நிர்வாகிகள், தென்னிந்திய மாநிலங்களின் பொறுப்பாளர்கள் எனப் பலரும் திரளாகப் பங்கேற்றனர். வரும் காலங்களில் தென்னிந்தியாவில் கட்சியின் செல்வாக்கை உயர்த்துவது மற்றும் அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைப்பது குறித்து இக்கூட்டத்தில் தேசியத் தலைவர்களால் முக்கிய ஆலோசனைகளும், பயிற்சிகளும் வழங்கப்பட்டன.




