மண்ணீரலில் காயம் — ஸ்ரேயஸ் ஐயர் தீவிர சிகிச்சையில்!
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 25 ஆம் தேதி சிட்னியில் நடைபெற்றது.
அப்போட்டியில் பீல்டிங் செய்தபோது, ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஓடிச் சென்று பிடிக்க முயன்ற இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் தவறி விழுந்தார். இதனால் அவரது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், ஸ்ரேயஸ் ஐயரின் மண்ணீரல் பகுதியில் காயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்று பிசிசிஐ மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த ஸ்ரேயஸ் ஐயர், தற்போது தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் நாளடைவில் மேம்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.