‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநருக்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வழங்கிய தயாரிப்பாளர்!
‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு, தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான் பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
அபிஷன் ஜீவிந்த் ‘டூரிஸ்ட் பேமிலி’ மூலம் இயக்குநராக அறிமுகமானார். வெளியானதும், படம் வசூலிலும் விமர்சனத்திலும் பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அபிஷன், தற்போது நாயகனாக புதிய படமொன்றில் நடித்துக் முடித்துள்ளார்.
‘டூரிஸ்ட் பேமிலி’யின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த மகேஷ் ராஜ் பசிலியான், அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்துள்ள புதிய படத்திலும் தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
வரும் அக்டோபர் 31 ஆம் தேதி அபிஷன் ஜீவிந்தின் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அவருக்கான திருமண பரிசாக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை மகேஷ் ராஜ் பசிலியான் வழங்கியுள்ளார்.
இருவரும் இணைந்திருக்கும் அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, ரசிகர்களும் திரையுலக நண்பர்களும் அபிஷன் ஜீவிந்திற்கு முன்னதாகவே திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.