இந்தியா வருகை தந்த வியட்நாம் அதிபர் டோ லாம்: பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் உற்சாக வரவேற்பு
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வியட்நாம் அதிபர் டோ லாம், இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அவருக்கு அங்கு சிறப்பான சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ வரவேற்பு நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேரில் சென்று வியட்நாம் அதிபரை அன்புடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, அதிபர் டோ லாமுக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவத் தலைமை அதிகாரிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த வருகை அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.






