“கரூர் விவகாரம்: முதலில் விசாரிக்க வேண்டியது செந்தில்பாலாஜியைத்தான்!” – சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி
கரூர் விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மார்ச் 15-ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
விசாரணையைச் சென்னையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் சிபிஐ தரப்பில் டெல்லிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த வழக்கில் முறையான விசாரணை நடைபெற வேண்டுமானால், முதலில் விசாரிக்கப்பட வேண்டிய நபர் அமைச்சர் செந்தில்பாலாஜி தான் என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தச் சம்மன் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.