“நீலாங்கரை இல்லத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு” – நடிகர் விஜய் மீது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்!

Date:

“நீலாங்கரை இல்லத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு” – நடிகர் விஜய் மீது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்!

நடிகர் விஜய் வசிக்கும் சென்னை நீலாங்கரை இல்லத்தில் தனக்கும் சரிபாதி உரிமை உள்ளதாகவும், அங்கு வசிக்கத் தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தங்களுக்குள் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், நீலாங்கரை வீட்டிற்குள் நுழைய விஜய் அனுமதி மறுப்பதாகவும், இதனால் சென்னையில் தங்குவதற்கு இடமின்றித் தவிப்பதாகவும் சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து நடைமுறைகள் முடிந்து தான் வேறு வீட்டிற்குச் செல்லும் வரை அதே இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அந்த வீட்டில் வசிக்க அனுமதி கோரினால் விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் மிரட்டல் விடுப்பதாகவும், தான் லண்டன் குடியுரிமை கொண்டவர் என்பதால் வேறு எங்கும் தங்க அனுமதியில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் விஜய், தனக்கும் தன் குழந்தைகளுக்கும் சேர வேண்டிய நியாயமான ஜீவனாம்சத்தை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள சங்கீதா, அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு விவாகரத்தைச் சுமூகமாக முடிக்கத் தான் எடுத்த முயற்சிகளை விஜய் நிராகரித்து வருவதாகவும் அந்த மனுவில் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 போர் விமானம் மாயம்: தேடுதல் பணி தீவிரம்!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 போர் விமானம் மாயம்: தேடுதல் பணி...

“ஈரானைத் தொடர்ந்து கியூபா மீது கவனம்”: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

"ஈரானைத் தொடர்ந்து கியூபா மீது கவனம்": அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்...

“ஒவ்வொரு இரவும் மரண பயம்”: ஈரானில் சிக்கித் தவிக்கும் 600-க்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள் கதறல்!

"ஒவ்வொரு இரவும் மரண பயம்": ஈரானில் சிக்கித் தவிக்கும் 600-க்கும் மேற்பட்ட...

மேற்குவங்க ஆளுநராக நியமனம்: ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

மேற்குவங்க ஆளுநராக நியமனம்: ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்...