தமிழக மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு – அனைவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைமுறைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நிறைவடைந்தது. இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதேபோல் திமுக சார்பில் களமிறங்கிய திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் மனுக்களும் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டன. முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் உட்பட 6 சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது முக்கியக் கட்சிகளின் 6 வேட்பாளர்களின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதால், அனைவரும் போட்டியின்றி தேர்வாக இருப்பது உறுதியாகியுள்ளது.