ரஞ்சி கோப்பையை வென்று ஜம்மு காஷ்மீர் வரலாற்று சாதனை: ரூ. 2 கோடி பரிசு அறிவிப்பு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை எளிதில் வீழ்த்தி, ஜம்மு காஷ்மீர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தனது முதல் ரஞ்சி கோப்பை பட்டத்தைக் கைப்பற்றி அந்த அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பாராட்டும் விதமாக, ஜம்மு காஷ்மீர் அணிக்கு அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளார். முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜம்மு காஷ்மீர் வீரர்களுக்கு தற்போது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.