கோவையில் திமுக கொடிக்கம்பம் மோதி விபத்து: இளைஞர் படுகாயம் – கொடிகளை அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை!

Date:

கோவையில் திமுக கொடிக்கம்பம் மோதி விபத்து: இளைஞர் படுகாயம் – கொடிகளை அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை!

கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை தர உள்ள நிலையில், எல் அண்ட் டி (L&T) பைபாஸ் சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு திமுக சார்பில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இவ்வாறு சாலையோரம் ஆபத்தான முறையில் கம்பங்கள் நடப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு விபத்து அச்சத்தை ஏற்படுத்துவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், இன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற செந்தில்குமார் என்பவர், நிலைதடுமாறி சாலையில் இருந்த திமுக கொடிக்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேற்கொண்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படாத வண்ணம், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி...

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் – சிறப்புத் தொகுப்பு

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்...

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி தலைமையில் ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி...

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் ‘வான் அமிர்தம்’ கருத்தரங்கம் – காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு!

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் 'வான் அமிர்தம்' கருத்தரங்கம் – காவேரி...