• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 6, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

”தலித் என்பதால் எனக்கு எதிராக நடவடிக்கை” – அரசு இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்பி உதித் ராஜ்

athibantv by athibantv
அக்டோபர் 25, 2025
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.9K 📋

”தலித் என்பதால் எனக்கு எதிராக நடவடிக்கை” – அரசு இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்பி உதித் ராஜ்

தலித் இனத்தினால் குறிவைக்கப்படுவதாக, டெல்லியில் உள்ள அரசு இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் ராஜ் தெரிவித்தார்.

Related posts

புதுச்சேரி பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக நமச்சிவாயம் ஒருமனதாகத் தேர்வு!

புதுச்சேரி பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக நமச்சிவாயம் ஒருமனதாகத் தேர்வு!

மே 5, 2026
மேற்கு வங்கத்தில் அரசியல் புரட்சி: 206 இடங்களைக் கைப்பற்றி பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது!

மேற்கு வங்கத்தில் அரசியல் புரட்சி: 206 இடங்களைக் கைப்பற்றி பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது!

மே 5, 2026

முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி உதித் ராஜ், 2014 முதல் 2019 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பாஜகவில் இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது அவர் அக்கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் அணியின் தேசிய தலைவர். இவரது மனைவி சீமா ராஜூ, ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி. புதுடெல்லியில் பண்டாரா பார்க்கில் C1/38 என்ற எண் கொண்ட அரசு பங்களா சீமா ராஜுக்கு ஒதுக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற பின் கூட அரசு பங்களாவை காலி செய்யாததால், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி காலி செய்யுமாறு கேட்டது. சீமா ராஜ் அவகாசம் கோரி மனு அளித்தார். அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து, காலி செய்ய வலியுறுத்தினர்.

இதையடுத்து, சீமா ராஜ் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவர் அரசு பங்களாவை காலி செய்ய தனக்கு ஒரு மாத காலம் தர வேண்டும் என்று கோரி உள்ளார். இதற்கிடையில், அவரது வீட்டில் உள்ள பொருட்களை அதிகாரிகள் வெளியே எடுத்துவிட்டனர். இதனால் உதித் ராஜ் வீதியில் கட்டிலை வைத்து தங்கியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய உதித் ராஜ், சமீபத்தில் தற்கொலை செய்த சண்டிகரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் சம்பந்தமாக விசாரணை கோரி மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் கேட்டதற்காக தற்போது பழிவாங்கப்படுவதாக தெரிவித்தார்.

“தலித் என்பதால் எனக்கு எதிராக நெருக்கடி கொடுக்கப்படுகிறது. பூரண் குமாரைப் போல நான் தற்கொலை செய்ய மோடி அரசு விரும்புகிறது, ஆனால் அது நடக்காது. வீடு காலி செய்யும் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. வரும் 28-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை பொறுத்துக்கொள்ள முடியாதா? உயர் சாதியினருக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது, ஆனால் எங்களுக்கு நெருக்கடி,” என்று உதித் ராஜ் கூறினார்.

அவர் மேலும், “மோடி அரசாங்கம் எனது வீட்டிலிருந்து பொருட்களை வெளியே எடுத்து சாலையில் வீசிவிட்டது. ஒரு தலித் எம்பி அல்லது தலைமை நீதிபதி இருந்தாலும், அவர்களுக்கு எதிரான செயல்கள் இதே போல் நடக்கும். பாஜக தலைவர்களின் உத்தரவின்பேரில் இது செய்யப்பட்டது,” என்று வலியுறுத்தினார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

சிறுவர் கதை புத்தகத்திற்கு புக்கர் பரிசு: 50,000 பவுண்டு பரிசுடன் தொடக்கம்

Next Post

தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்வு – இன்றைய நிலவரம்

Next Post

தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்வு – இன்றைய நிலவரம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு!

தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

மே 6, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து
  • “சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்
  • தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN