ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரிக்கையை கைவிடவில்லை – திருமாவளவன்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை தாங்கள் கைவிடவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது இயல்பான கோரிக்கை என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கிய நாள் முதலே இந்த கோரிக்கை தங்களிடம் இருந்து வருவதாகவும் கூறினார்.
கூட்டணியில் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்பதற்காக, அந்த கோரிக்கைக்கு தற்போது அதிக அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் விளக்கினார்.
அதே நேரத்தில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறும் கோரிக்கையை ஒருபோதும் கைவிடவில்லை என்றும் திருமாவளவன் தெளிவுபடுத்தினார்.