பாஜக மாவட்ட துணைத் தலைவரை வீடு புகுந்து வெட்டிய மர்ம கும்பல்
ராமநாதபுரம் மாவட்டத்தில், பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஏ.பி. கணபதியை வீடு புகுந்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமுதியைச் சேர்ந்த ஏ.பி. கணபதி, தனது வீட்டில் இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த மர்ம கும்பல், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை தாக்கியுள்ளது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டுவருவதற்குள், தாக்குதலாளர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கணபதி, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.