மகா சிவராத்திரி விழா: கோவை ஈஷா யோகா மையத்தில் உற்சாக கொண்டாட்டம்
ஈஷா யோகா மையம் பகுதியில் மகா சிவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
நேற்று மாலை 6 மணி முதல் விடிய விடிய நடைபெற்ற இந்த விழாவில், ஆதியோகி திவ்ய தரிசனம், சத்குருவால் வழங்கப்பட்ட மகாமந்திர தீட்சை, தியானங்கள், அருளுரை, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
நடப்பாண்டு முதல்முறையாக ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட யோகேஷ்வர லிங்கத்திற்கு, ஜக்கி வாசுதேவ் மகா அபிஷேகம் செய்தார்.
விடியவிடிய நடைபெற்ற பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், எல். முருகன், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகை தமன்னா பாட்டியா, முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட பிரபலங்களும் விழாவில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
மகா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஆன்மிக உற்சாகத்துடன் கொண்டாடினர்.