ஜெப்ரீ எப்ஸ்டீன் மரணத்தில் புதிய சந்தேகம்: கொலை செய்யப்பட்டாரா?
பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஜெப்ரீ எப்ஸ்டீன் மரணத்தில் புதிய திருப்பமாக, அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என மருத்துவர் மைக்கேல் பேடன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி, நியூயார்க் சிறை அறையில் எப்ஸ்டீன் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், சமீபத்தில் எப்ஸ்டீனை தொடர்புடைய ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, அவரது உடற்கூராய்வின் பார்வையாளராக இருந்த மருத்துவர் மைக்கேல் பேடன், எப்ஸ்டீன் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த வழக்கில் புதிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. எப்ஸ்டீன் மரணத்தில் உண்மை என்ன என்பது குறித்து மீண்டும் விவாதம் தீவிரமடைந்துள்ளது.