“ஆன்லைன் அபராதம் செல்லாது” – கோவையில் போக்குவரத்து காவலர் நடத்தை குறித்த வீடியோ வைரல்

Date:

“ஆன்லைன் அபராதம் செல்லாது” – கோவையில் போக்குவரத்து காவலர் நடத்தை குறித்த வீடியோ வைரல்

அபராதம் இயந்திரம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என கூறியதாக குற்றச்சாட்டு

கோவை நகரில் ஆன்லைன் மூலம் அபராதம் செலுத்த அனுமதிக்காமல், தங்களிடம் உள்ள இயந்திரம் மூலமே கட்டணம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படும் போக்குவரத்து காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே நடைபெற்ற வாகனத் தணிக்கையின் போது, சரக்கு ஆட்டோவில் தனது குடும்பத்தினரை அழைத்துச் சென்ற ஓட்டுநரை போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையை ஆன்லைன் வழியாக செலுத்தத் தயாராக இருப்பதாக ஓட்டுநர் தெரிவித்தபோது, ஆன்லைன் கட்டணம் ஏற்கப்படாது, காவல்துறையினர் வைத்திருந்த இயந்திரம் மூலமே அபராதம் செலுத்த வேண்டும் என போக்குவரத்து காவலர் வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

10 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நாடு தழுவிய போராட்டம் – சென்னை நகரில் பேருந்துகள்

10 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நாடு தழுவிய போராட்டம் – சென்னை...

வீட்டுமனை மோசடி வழக்கு: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் 2 நாள் போலீஸ் காவலில் விசாரணை

வீட்டுமனை மோசடி வழக்கு: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர்...

பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணிக்கு உதவிய இந்திய ராணுவம் – மனிதநேய சேவைக்கு பாராட்டு

பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணிக்கு உதவிய இந்திய ராணுவம் – மனிதநேய சேவைக்கு...

சேலத்தில் 5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேர மது விற்பனை? – பொதுமக்கள் புகார்

சேலத்தில் 5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேர மது விற்பனை?...