இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள நாளை வருகை தருகிறார்.
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தமிழகத்திற்கு வர உள்ள அவர், முதலில் திருச்சிக்கு சென்று அங்கு உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் சனிக்கிழமை ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்லும் அமித்ஷா, அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் திருச்சி திரும்பும் அவர், தமிழகத்தின் தேர்தல் நிலவரம் குறித்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.