• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 6, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

கல்வான் சம்பவத்துக்கு பின்னர் அணு சோதனை குறித்த சர்ச்சை

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

கல்வான் சம்பவத்துக்கு பின்னர் அணு சோதனை குறித்த சர்ச்சை

2020ஆம் ஆண்டு சீனா மறைமுகமாக பல அணுசக்தி பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும், அணு சோதனைத் தடை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளை மீறும் செயல்பாடுகளை மறைத்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

Related posts

அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன் முன்னிலை!

அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன் முன்னிலை!

மே 3, 2026
ஈரான் மீதான போர் நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக முடிவு: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

ஈரான் மீதான போர் நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக முடிவு: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மே 2, 2026

ரஷ்யா–அமெரிக்கா இடையிலான “நியூ ஸ்டார்ட்” அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலாவதியான சூழலில், அதை நீட்டிக்க வேண்டும் என்ற ரஷ்யாவின் முன்மொழிவை அமெரிக்கா ஏற்கவில்லை. அதேவேளை, இந்த ஒப்பந்தத்தில் சீனாவையும் சேர்க்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா ஆயுதக் குறைப்பு மாநாட்டில் அமெரிக்காவின் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் உலகளாவிய பாதுகாப்பு பிரிவு துணைச் செயலாளர் தாமஸ் டினானோ, சீனா இரகசியமாக அணு ஆயுத பரிசோதனைகள் நடத்தியதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பதிவில், 2020ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் இந்தியா–சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கல்வான் மோதலுக்கு ஒரு வாரம் கழித்து சீனா அணு பரிசோதனை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய எல்லைக்கு அருகிலுள்ள ஜின்ஜியாங் மாகாணத்தின் லாப் நூர் மையத்தில், நில அதிர்வுகளை மறைக்கும் “டிகப்பிளிங்” தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிக சக்தி கொண்ட அணு சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சீனாவின் அணு ஆயுதக் குறைப்பு தொடர்பான தூதர் ஷென் ஜியான், சீனாவை அணு அச்சுறுத்தலாக சித்தரிக்க அமெரிக்கா முயற்சித்து வருவதாகவும், இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சீனா தெளிவாக மறுக்கிறது என்றும் கூறினார். உலகளாவிய அணு ஆயுதப் போட்டி தீவிரமடைவதற்கு அமெரிக்காதான் காரணம் என்றும் அவர் சாடினார்.

அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் பேச்சாளர், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்து, அணு சோதனைத் தடை ஒப்பந்த விதிமுறைகளை சீனா மதித்து வருகிறது என தெரிவித்தார்.

அணு சோதனைத் தடை ஒப்பந்த அமைப்பின் நிர்வாகச் செயலாளர் ராபர்ட் ஃபிலாய்ட், சீனா அணு சோதனை நடத்தியதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என விளக்கம் அளித்தார்.

இதேவேளை, ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டேரில் கிம்பால், சீனா மறைமுகமாக சோதனை நடத்தியிருக்க வாய்ப்பு இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட சர்வதேச ஆயுதக் கட்டுப்பாட்டு அறிக்கையிலும், இந்த ஆண்டு பென்டகன் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த சீன இராணுவ வளர்ச்சி தொடர்பான அறிக்கையிலும், சீனா அணு சோதனை நடத்தியதாக எந்த குறிப்பும் இடம்பெறவில்லை.

தற்போது சீனாவிடம் சுமார் 600 அணு ஆயுதங்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அது 1500 ஆக அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் 5,500-க்கும் அதிகமான அணு ஆயுதங்களும், அமெரிக்காவிடம் 5,044 அணு ஆயுதங்களும் இருப்பதாக அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆயுதப் போட்டியை கட்டுப்படுத்த வேண்டும் என மூன்று நாடுகளும் வெளிப்படையாகக் கூறிவந்தாலும், அவற்றின் நடைமுறை நடவடிக்கைகள் அதனை பிரதிபலிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுகின்றன.

இந்நிலையில், புதிய அணுசக்தி கட்டுப்பாட்டு ஒப்பந்தம் விரைவில் உருவாகுமா என்ற கேள்வி சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

பாகிஸ்தான்–மலேசிய உறவில் மாற்றக் காற்று

Next Post

“தமிழ்நாட்டில் மட்டும் அதிகாரப் பகிர்வு ஏன் இல்லை?” – பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி

Next Post

“தமிழ்நாட்டில் மட்டும் அதிகாரப் பகிர்வு ஏன் இல்லை?” – பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு!

தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

மே 6, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து
  • “சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்
  • தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN