உக்ரைனுக்கு எதிராக குளிர்காலத்தை ஆயுதமாக பயன்படுத்தும் ரஷ்யா
உக்ரைனில் நிலவும் கடும் குளிர் காலச் சூழலை சாதகமாகக் கொண்டு, ரஷ்யா மீண்டும் தீவிர வான்வழி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
சுமார் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போருக்கு, வரும் ஜூன் மாதத்துக்குள் முடிவுக்கான தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா காலக்கெடு நிர்ணயித்துள்ள நிலையில், ரஷ்ய படைகளின் விமானத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, உக்ரைனின் டோனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள க்ராமடார்ஸ்க் நகரின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.