• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 6, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

20 மணி நேர தொடர் நடவடிக்கை – ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்

athibantv by athibantv
பிப்ரவரி 7, 2026
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.8K 🔥 📋

20 மணி நேர தொடர் நடவடிக்கை – ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கடினமான மலை மற்றும் வனப்பகுதியில் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மூத்த தளபதி ஆதில் உட்பட இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

இரண்டு தசாப்தங்களாக பாதுகாப்புப் படைகளின் பிடியில் சிக்காமல் தப்பித்து வந்த ஆபத்தான பயங்கரவாதி ஆதில் எவ்வாறு அழிக்கப்பட்டார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

புதுச்சேரி பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக நமச்சிவாயம் ஒருமனதாகத் தேர்வு!

புதுச்சேரி பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக நமச்சிவாயம் ஒருமனதாகத் தேர்வு!

மே 5, 2026
மேற்கு வங்கத்தில் அரசியல் புரட்சி: 206 இடங்களைக் கைப்பற்றி பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது!

மேற்கு வங்கத்தில் அரசியல் புரட்சி: 206 இடங்களைக் கைப்பற்றி பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது!

மே 5, 2026

ராணுவத்தின் ‘ஒயிட் நைட் கார்ப்ஸ்’ பிரிவு, கிடைத்த துல்லியமான உளவுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, உதம்பூர் மாவட்டத்தின் ஜோஃபர் வனப்பகுதியில் ‘கியா’ என்ற குறியீட்டுப் பெயரில் சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது.

கிஸ்ட்வார் மலைப்பகுதியின் அடர்ந்த காடுகள் மற்றும் சவாலான நில அமைப்புகளில் மறைந்திருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தேடிப் பிடிக்கும் நோக்கில், ‘ஆபரேஷன் டிராஷி – 1’ என்ற திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆகியவற்றின் கூட்டு படைகள், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் இடைவிடாது தேடுதல் பணியில் ஈடுபட்டன.

ஜோஃபர், குஜ்ராடா, சிக்லாபலோதா உள்ளிட்ட அருகிலுள்ள வனப்பகுதிகளில் நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புப் படைகளுடன் நடந்த மோதலில் காயமடைந்த இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள், கடும் சரிவுகள் கொண்ட மலையில் உள்ள, எளிதில் அணுக முடியாத ஒரு குகைக்குள் ஒளிந்துகொண்டனர். அந்த குகையின் நுழைவுப் பகுதியை உடைத்து, பாராசூட் படையினர், மோப்ப நாய் அணிகள் உள்ளிட்ட துணைப் படைகளுடன் பாதுகாப்புப் படைகள் அந்த இடத்தை முற்றுகையிட்டன.

கண்காணிப்பு ட்ரோன்கள் மூலம் குகை மற்றும் அதன் சுற்றுப்புற வனப்பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்ட நிலையில், நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் அழிக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, கடந்த 18 மாதங்களாக சுமார் 20 முறைக்கும் மேல் பாதுகாப்புப் படைகளிடமிருந்து தப்பித்து வந்த, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய பயங்கரவாதி ஆதில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.

குகைக்குள் இருந்து எம்4 கார்பைன், ஏகே வகை துப்பாக்கிகள் உள்ளிட்ட பெருமளவு ஆயுதங்களும் வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆதிலுக்கு நெருங்கிய துணையாக செயல்பட்டு வந்த, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி சைஃபுல்லாவை கைது செய்ய பாதுகாப்புப் படைகள் தேடுதல் வேட்டையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எல்லை வழியாக காஷ்மீருக்குள் நுழைந்த சைஃபுல்லா, கிஸ்ட்வார் மற்றும் டோடா பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உள்ளூர் இளைஞர்களை தீவிரவாதத்திற்கு ஈடுபடுத்தி, பயங்கரவாத வலையமைப்பை உருவாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த பயங்கரவாதியை பிடிக்க, பாதுகாப்புப் படைகள் தற்போது மூன்று தனித்தனி தேடுதல் நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு சூழ்நிலையை நேரில் ஆய்வு செய்வதற்கும், முக்கிய வளர்ச்சி திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்குமான மூன்று நாள் பயணமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு சென்றுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

பறவைக்காய்ச்சல் பரவல் – பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

Next Post

SMART – கடலின் வான்பருந்து! எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மரணச் சாசனம்

Next Post

SMART – கடலின் வான்பருந்து! எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மரணச் சாசனம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு!

தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

மே 6, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து
  • “சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்
  • தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN