மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ மாநாடு – நயினார் நாகேந்திரன் தலைமையில் திட்டமிடல் கூட்டம்

Date:

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ மாநாடு – நயினார் நாகேந்திரன் தலைமையில் திட்டமிடல் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ள பொதுக்கூட்டம் தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வரும் 28ஆம் தேதி, மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது, கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பேராசிரியர் ராம் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இஸ்லாமாபாத்தை பின்தள்ளிய டிரம்ப் – இந்தியா முன்னேற்றம்

இஸ்லாமாபாத்தை பின்தள்ளிய டிரம்ப் – இந்தியா முன்னேற்றம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே...

தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி ஆலயத்தில் தை உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது

தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி ஆலயத்தில் தை உத்திர விழா சிறப்பாக...

அடிப்படை வசதிகள் இன்றியே அவசரமாக திறக்கப்பட்ட தருமபுரி புதிய பேருந்து நிலையம்

அடிப்படை வசதிகள் இன்றியே அவசரமாக திறக்கப்பட்ட தருமபுரி புதிய பேருந்து நிலையம் தருமபுரி...

அஜித் தோவல்–ரூபியோ சந்திப்பு: மோடியின் உறுதியான நிலைப்பாட்டுக்கு அடிபணிந்த அமெரிக்கா – பின்னடைந்த ட்ரம்ப்

அஜித் தோவல்–ரூபியோ சந்திப்பு: மோடியின் உறுதியான நிலைப்பாட்டுக்கு அடிபணிந்த அமெரிக்கா –...