சிங்கப்பூர் ஏர்ஷோவில் அசத்தல் காட்சி – இந்திய விமானப்படையின் பிரமாண்ட வான்சாகசம்
ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியாகக் கருதப்படும் சிங்கப்பூர் ஏர்ஷோ இந்த ஆண்டு உற்சாகமாக தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிநவீன போர் விமானங்கள் மற்றும் வர்த்தக விமானங்கள் பங்கேற்று, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் பெரும் நிகழ்வு, உலகளாவிய ராணுவ திறன்களையும், விமானப் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றமான தொழில்நுட்பங்களையும் ஒரே மேடையில் வெளிப்படுத்துகிறது.
சிங்கப்பூர் ஏர்ஷோ 2026 நிகழ்வில், இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற ‘சாரங்’ (Sarang) ஹெலிகாப்டர் ஏரோபாட்டிக் குழு, தங்களின் கண்கவர் வான்வழி நிகழ்வுகள் மூலம் சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்தது.
இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் ஒரு பகுதியாக உருவான இந்த ‘சாரங்’ அணியின் காட்சிகள், இந்தியாவின் தொழில்நுட்ப திறன் மற்றும் வளர்ச்சியை உலகிற்கு எடுத்துரைப்பதாக அமைந்தது.