நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? – அமைச்சர் காந்தியிடம் அதிருப்தி வெளிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்

Date:

நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? – அமைச்சர் காந்தியிடம் அதிருப்தி வெளிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற கைத்தறித் துறை சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அமைச்சர் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததாக தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் கைத்தறித் துறை ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. ஆனால் அந்த நிகழ்வில் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த முதலமைச்சர், பின்னர் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் காந்தியிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. வரவேற்பின் போது புத்தகம் வழங்க வந்த அமைச்சர் காந்தியை, முதலமைச்சர் நேரடியாக கடிந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி மீது சின்ன உடைப்பு கிராம மக்களின் எதிர்ப்பு தீவிரம்

மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி...

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில் அதிருப்தி; மதுரை ஆட்சியர் அலுவலகம் போராட்டக்களம்

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில்...

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு அமெரிக்கா...

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள்...