சிந்து நதிநீர் ஒப்பந்த விவகாரம் – சர்வதேச தீர்ப்பை நிராகரித்த இந்தியா
சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நடுவர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை, அது சட்டப்பூர்வமற்றது எனக் கூறி இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நடுவர் நீதிமன்றம், ஜம்மு–காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பக்லிஹார் மற்றும் கிஷன்கங்கா நீர்மின் திட்டங்களின் செயல்பாடு குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க இந்தியாவுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள சூழலில், அந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் எந்த நீதிமன்ற உத்தரவுகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இந்த நடுவர் நீதிமன்றம் சட்டப்படி அமைக்கப்படாதது என்றும், இந்தியாவை குறித்து தீர்ப்பளிக்க அதற்கு எந்த அதிகார வரம்பும் இல்லை என்றும் இந்தியா தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.