சென்னையில் மழைநீர் நீர்த்தேக்கம் தடுக்கும் நடவடிக்கைகள் – தமிழக அரசு
சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் 1,436 மோட்டார் பம்புகள், 100Hp திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகள், டிராக்டர் மேல் பொருத்தப்பட்ட 500 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
நிவாரண மையங்கள்:
- சென்னை மாநகராட்சியில் 215 நிவாரண மையங்கள் செயலில் உள்ளன.
- 106 சமையல் கூடங்கள் மூலம், 22.10.2025–23.10.2025 வரை 4.4 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள்:
- 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் மழைநீர் அகற்றும் பணிக்கு தயாராக உள்ளன.
- விழும் மரங்களை அகற்ற 457 மர அறுவை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன; 17.10–22.10.2025 வரை விழுந்த 31 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
மற்ற ஏற்பாடுகள்:
- 22,000 பேரும், குடிநீர் வாரியத்தின் 2,149 பணியாளர்களும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
- குடிநீர் வழங்க 454 வாகனங்கள் செயல்பட்டு, 3,181 நடைகளில் தடையில்லாமல் குடிநீர் வழங்கப்பட்டது.
- பொதுமக்கள் புகார்கள் தொடர்பாக 1913 (மழை, புகார்கள்) மற்றும் 1916 (குடிநீர்/கழிவு நீர்) எண்களில் 24 மணி நேர உதவி பெறலாம்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக, காணொலி வழியாக ஆய்வுக்கூட்டங்களில் கலந்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர்.