தேசியக் கொடியை ஏந்தி நீந்திய இளம் வீரர்கள் – தண்ணீரிலும் ததும்பிய தேசபக்தி
நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குஜராத் மாநிலம் வதோதராவில் இளம் நீச்சல் வீரர்கள் தங்களது தேசப்பற்றை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளனர்.
நீச்சல் குளத்தில் தேசியக் கொடியை ஏந்தியபடி சீராக நீந்திச் சென்ற இளம் வீரர்கள்,
தண்ணீரிலும் தேசபக்தி ததும்பும் தருணத்தை உருவாக்கினர்.
நீச்சல் குளத்தின் மேற்பரப்பில் மூவர்ணக் கொடி அலைபாய்ந்தபடி, வீரர்கள் தன்னம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் நீந்திச் சென்ற காட்சி, அங்கிருந்த பார்வையாளர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியது.
தரை, வானம் மட்டுமல்ல…
தண்ணீரிலும் ஒலித்த தேசபக்தி!
இளம் தலைமுறையின் உற்சாகம்,
இந்தியாவின் எதிர்காலத்தின் நம்பிக்கை.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!