“தமிழக காங்கிரஸ் புதிய பாதையில் பயணத்தை தொடரும்” – தங்கபாலு
தமிழக காங்கிரஸ் கட்சி புதிய பாதையில் பயணத்தை தொடர்ந்து வரும் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற புதிய மாவட்டத் தலைவர்கள் பதவியேற்பு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான தங்கபாலு கலந்து கொண்டார்.
விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
காமராஜரையும், காங்கிரஸ் நிர்வாகிகளையும் திமுகவினர் தொடர்ந்து அவமதித்து வரும் சூழலில், காங்கிரஸ் தலைவர்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த தங்கபாலு,
காங்கிரஸ் கட்சியின் இலக்கு மத்திய அரசியல்தான் என்றும், அந்த இலக்கை அடைவதற்காக சில தியாகங்களை காங்கிரஸ் நிர்வாகிகள் செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த கருத்துகள், தமிழக காங்கிரஸ் அரசியல் செயல்பாடுகள் குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.