திமுக கூட்டணியில் உள்ள விசிகவின் மது ஒழிப்பு மாநாடு அர்த்தமற்றது – சீமான் விமர்சனம்
திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாடு எந்த பயனும் அளிக்காத ஒன்றாகும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை தாம்பரம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், மது ஒழிப்பை வலியுறுத்தி மாநாடு நடத்திய விசிக தலைவர் திருமாவளவன், “எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுபவர்களுடன் மட்டுமே கூட்டணி” என வெளிப்படையாக அறிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மது ஒழிப்பு போன்ற அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றாத ஆட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, அதற்கு எதிராக மாநாடு நடத்துவது எப்படி தீர்வை தரும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத கட்சியுடன் இணைந்து செயல்பட்டால், சமூக மாற்றம் எவ்வாறு சாத்தியமாகும் எனவும் சீமான் சந்தேகம் தெரிவித்தார்.