பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டும் உரை – பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்
சென்னைக்கு அருகே அமைந்துள்ள மாங்காடு பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில், பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்வித் தரத்தில் முன்னிலை வகிக்கும் இந்த தனியார் பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பயிற்சி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்காக ஆலோசனை வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், மாணவர்களை நோக்கி உற்சாக உரையாற்றினார்.
உரையின்போது, மாணவர்கள் அரசியல்வாதிகளையோ அல்லது திரைப்படத் துறையினரையோ முன்மாதிரியாகக் கொள்ள வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.