என்டிஏவில் அமமுக இணைப்பு – ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்க துணை நிற்போம் : தினகரன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) அமமுக இணைந்துள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அமமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சிறந்த நிர்வாகத்தை உருவாக்கும் நோக்கில் தான் என்டிஏவில் அமமுக இணைந்ததாக விளக்கினார். இந்த இணைப்பு நல்லாட்சிக்கான புதிய தொடக்கமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய முழு ஆதரவுடன் செயல்படுவோம் என்றும் தினகரன் உறுதி அளித்தார்.
அதிமுகவுடன் உள்ள பிரச்சினை என்பது அதிகாரப் பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடே தவிர வேறு எதுவுமில்லை என்றும், சமரசமாக நடப்பவர்கள் ஒருபோதும் தோல்வியடைவதில்லை என்றும் அவர் கூறினார்.