ஆற்றுத் திருவிழாவில் ஏற்பட்ட கொடூர விபத்து – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றங்கரையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவின் போது, பலூன்களில் நிரப்ப பயன்பட்ட ஹீலியம் வாயு சிலிண்டர் திடீரென வெடித்ததில், ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்ததாகவும், பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் விரைவில் முழுமையான உடல் நலத்துடன் குணமடைந்து, பாதுகாப்பாக தங்கள் இல்லங்களுக்கு திரும்ப வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை மனமார பிரார்த்திக்கிறேன்.
— நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில தலைவர்