அமைச்சர்–எதிர்க்கட்சி எம்எல்ஏ ஒரே சாரட்டில் பயணம்: காரைக்காலில் ஆச்சரிய நிகழ்வு
காரைக்கால் கார்னிவல் விழாவில், புதுச்சேரி அமைச்சரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரும் ஒரே சாரட் வண்டியில் அமர்ந்து பயணித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் காரைக்கால் கார்னிவல் விழாவை புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவின் தொடக்க நிகழ்ச்சியை தொடர்ந்து, அமைச்சர் திருமுருகனும் திமுக எம்எல்ஏ நாஜிமும் அருகருகே அமர்ந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் சாரட் வண்டியை இயக்கி ஊர்வலமாக சென்றார்.
அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகளில் இருக்கும் இரு மக்கள் பிரதிநிதிகளும், சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் ஒரே வாகனத்தில் பயணித்த காட்சியை பொதுமக்கள் வியப்புடன் கண்டனர்.